”விஜய் அப்படி சொல்லியிருக்காரு”..!! ”ஆனா, இங்க அப்படி இல்ல”..!! பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் தவெக பெண் நிர்வாகி..!!
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலங்களில் பல இடங்களிலும் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் த.பழூர் ஒன்றியம் சார்பில் மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி, தன்னுடைய சொந்த செலவில் கொடி மற்றும் கம்பம் ஆகியவற்றை தயார் செய்து கொடியேற்றி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெகவின் மற்ற நிர்வாகிகள் தாங்களே எல்லாம் செய்ததுபோல காண்பித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, பெண்களுக்கு மரியாதை இல்லை என பிரியதர்ஷினி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி, “ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக இருக்கிறேன். நாங்கள் கொடியேற்றினோம். அதேபோல எல்லா ஊருக்கும், எல்லா இடத்துக்கும் சென்று செயல்பட்டு இருக்கிறேன்.
விஜய் விக்கிரவாண்டியில் கொடியேற்றியதில் இருந்து அனைத்து இடத்திற்கும் சென்றிருக்கிறேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். எங்கள் ஊரில் கொடியேற்றுவதற்காக கஷ்டப்பட்டு செலவு செய்தேன். ஆனால், அப்படி செய்தும் எனக்கு மரியாதை தரவில்லை. விஜய் பெண்களுக்கு மரியாதை தர வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஆனால், வந்தவர்கள் அவர்களே செய்த மாதிரி காண்பித்துக் கொள்கிறார்கள். எனக்குள்ள மரியாதை ஒன்றுமே செய்யவில்லை. என்னை வெளியில் காமிக்கவே இல்லை. மகளிருக்கு முக்கியத்துவம் என விஜய் பேசுகிறார். ஆனால், அவருக்காக செயல்படுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் செய்வதை போல் தான் காண்பித்துக் கொள்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : ”மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி”..!! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!!