For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை..? மறுத்த அமைச்சர்.. ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை..!!

Annamalai has appealed to the School Education Minister to immediately pay the outstanding amount of Rs 1.5 crore due to BSNL.
07:14 PM Dec 23, 2024 IST | Mari Thangam
bsnl நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை    மறுத்த அமைச்சர்   ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை
Advertisement

பள்ளிகளுக்குக்கான இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல்-க்கு அளிக்க வேண்டிய ரூ.1.50 கோடி பாக்கிய பள்ளிக்கல்வித்துறை செலுத்த்வில்லை என்றும், ஆதலால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனை அன்பில் மகேஷ் மறுக்கவே மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கட்டணம் செலுத்தக்கோரி அரசு எழுதிய கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித் துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். அப்படியானால், பள்ளிக்கல்வித் துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?

சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரி வர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read more ; பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.. குரூப் ‘A’  அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய டெல்லி எல்ஜி ஒப்புதல்..!!

Tags :
Advertisement