For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆளுநரை சந்தித்த விஜய்..!! திடீரென புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ்..!! கொந்தளிக்கும் தவெகவினர்..!!

The police arrest of Tamil Nadu Vetri Kalka General Secretary N. Anand has caused a stir.
04:29 PM Dec 30, 2024 IST | Chella
ஆளுநரை சந்தித்த விஜய்     திடீரென புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ்     கொந்தளிக்கும் தவெகவினர்
Advertisement

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முக்கிய உதவியாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இன்று விஜய், ஆளுநரை சந்திக்க சென்றபோது ஆனந்தும் சென்றார். இந்நிலையில், தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கைதுக்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

அண்ணா பல்லைக்கழக மாணவி சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் இன்று கைப்பட கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா். தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய கடிதத்தை விநியோகம் செய்து வருகின்றனா். அந்த வகையில், சென்னை தி.நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை விநியோகம் செய்தனா்.

அப்போது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவர்களை காண தவெக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். அந்த சமயத்தில் அவரையும் போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளனர். இதனால் மண்டப வளாகத்தில் சேர் ஒன்றில் அமைதியாக புஸ்ஸி ஆனந்த் அமர்ந்திருந்தார். அவரது கைதுக்கு தவெக தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.

Read More : ”உனக்கு இனி நான் தான் அப்பா, அம்மா”..!! மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் யூடியூபர் டிடிஎஃப் வாசன்..!!

Tags :
Advertisement