For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும்...! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம்

DMK should focus on fulfilling its election promises
05:45 AM Jan 07, 2025 IST | Vignesh
திமுக தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும்     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம்
Advertisement

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement