19 மில்லியன் கிலோமீட்டரில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட பூனை வீடியோ.! நாசாவின் புதிய சாதனை.!
நீண்ட நாட்களாகவே விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் அனைத்து நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் முன்னோடியாக இருப்பது அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமாகும்.
தற்போது வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே இருக்கும் ஒரு எரிகல்லை ஆய்வு செய்வதற்காக Psyche என்ற விண்கலம் ஏவப்பட்டிருக்கிறது. இந்த விண்கலம் தற்போது பூமியிலிருந்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்கலத்திலிருந்து வீடியோ ஒன்று அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவில் பூனை ஒன்று லேசர் ஒலிகளை துரத்தி விளையாடுவது போன்ற 15 நொடி காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பூமியிலிருந்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விண்கலத்திலிருந்து லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அல்ட்ரா ஹை டெபினிஷன் வீடியோ 101 வினாடிகளில் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஒரு நொடிக்கு 267 மெகாபைட்ஸ் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது.
இது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும் புதன் கிரகத்திற்கு மனிதனை அனுப்பலாம் என்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திட்டத்திற்கு இந்த தகவல் தொழில்நுட்பம் புது நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை நாசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.