கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!! வானிலை மையம் அலர்ட்..!!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நீலகிரி, கோவை (மலைப் பகுதிகள்), தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 15) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கலில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பம் குறையும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.