For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Heavy to very heavy rain is likely at one or two places in the hilly areas of Nilgiris and Coimbatore districts, the Meteorological Department said.
01:33 PM Jun 26, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும்     எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்     வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்றும், நாளையும் (ஜூன் 27) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா..? அதுவும் இந்த நேரத்தில்..!! நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement