For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதுதான்”..!! முதல்வரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..!!

Annamalai criticized Tamil Nadu Prohibition Amendment Act as the best joke of the year.
10:37 AM Jun 29, 2024 IST | Chella
”இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதுதான்”     முதல்வரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை
Advertisement

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக அமளியில் ஈடுபட்டனர். பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கடந்த 2023ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தாண்டு கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள். இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதல்வர் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை” என விமர்சித்துள்ளார்.

Read More : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!! சாத்தூரில் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement