முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு...!

Verdict today in Kolkata medical student rape and murder case
05:25 AM Jan 18, 2025 IST | Vignesh
Advertisement

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது அதை தற்கொலை என பெற்றோர்களிடம் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே அவரசர அவசரமாக கட்டட புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சியால்டா நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க சிபிஐ கோரியுள்ளதாகத் சொல்லப்படுகிறது.

Tags :
cbirapeRGKARwest bengal
Advertisement
Next Article