For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16 வயது சிறுவனுடன் உடலுறவு!. யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சிறுமி!. சிசுவுக்கு நேர்ந்த சோகம்!

Sex with a 16-year-old boy!. Girl who had an abortion after watching YouTube!. Tragedy for the baby!
08:12 AM Jan 19, 2025 IST | Kokila
16 வயது சிறுவனுடன் உடலுறவு   யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சிறுமி   சிசுவுக்கு நேர்ந்த சோகம்
Advertisement

Surat: சூரத்தில் 16 வயது சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பமான சிறுமி, யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குஜராத் மாநிலம் சூரத்தின் பண்டேசரா காவல் நிலையப் பகுதியில் ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த சில நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். குழந்தை இறந்துவிட்ட நிலையில், குழந்தையை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, குழந்தையை பெற்றெடுத்த பெண், மைனர் சிறுமி(16) என்பது தெரியவந்தது.

போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்றபோது, ​​முழு விஷயம் அம்பலமானது. போலீஸ் விசாரணையில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, யூடியூப்பில் வீடியோவை பார்த்து கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், பின்னர் ஜனவரி 8 ஆம் தேதி இரவு, சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையில் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் யாருக்கும் தெரியாமல், பிறந்த குழந்தையை தூக்கி எறிந்ததாக சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.

சமூக ஊடகம் மூலம் 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் சிறுமியை தனியாக அழைத்து சென்று சிறுவன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் இதனால் கர்ப்பமானதாக கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Readmore: ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி!. இறைச்சிக் கடைகளை மூட அதிரடி உத்தரவு!. இரண்டிற்கும் என்ன தொடர்பு?

Tags :
Advertisement