For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வடிவேலு பட காமெடி நடிகருக்கு இப்படி ஒரு நிலமையா? ஒரு கை, ஒரு கால் செயல் இழப்பு.. மாத்திரை வாங்க கூட காசு இல்ல!!

Venkelrao, who is famous for acting in comedy roles in several films with Vadivelu, is struggling with no money even for medical expenses, a video has gone viral on the internet.
09:01 AM Jun 25, 2024 IST | Mari Thangam
வடிவேலு பட காமெடி நடிகருக்கு இப்படி ஒரு நிலமையா  ஒரு கை  ஒரு கால் செயல் இழப்பு   மாத்திரை வாங்க கூட காசு இல்ல
Advertisement

வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான வெங்கல்ராவ் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக, வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

செந்தில் - கவுண்டமணிக்கு பின்னர், ரசிகர்களை காமெடியால் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தவர் வடிவேலு தான். அவருடன் காமெடி ரோலில் நடித்து, திறமை இருந்தும் காணாமல் போன பல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வெங்கல்ராவ்.  இவர் வடிவேலுவுடன் இணைந்து, கந்தசாமி படத்தில் தேங்காய் பேரம் பேசும் காமெடியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனா தானா 007 படத்திலும் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடும் மனநோயாளியாக நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

இப்படி பல காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வாய்த்த இவர், இன்று தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வேதனையோடு பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  இவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சமீபத்தில் வெங்கல்ராவின், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப  கலைஞர்கள் தனக்கு உதவுமாறு பேச கூட முடியாத நிலையில் கேட்டுள்ளார்.

Read more ; ஆச்சரியம்!. மனிதர்களைப் போலவே, நட்சத்திரங்களும் தும்முகின்றன!. அவை எப்போது தும்முகின்றன?

Tags :
Advertisement