தூள்...! தா.வெ.க மாநாடு... காலை 10 மணி முதல் சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் செல்ல அனுமதி..!
தா.வெ.க மாநாடு இன்று நடைபெறும் நிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை 10 மணி முதல் கட்டணம் இன்றி வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் முதல்படியாக விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஆகஸ்ட் 28-ம் தேதி தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் அனுமதி வேண்டி மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2- ம் தேதி 21 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறை புஸ்ஸி ஆனந்துக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல் துறை மாநாடு நடத்த அனுமதி அளித்தது. இதையேற்று அக்டோபர் 27-ம் தேதி மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டு மேடையில். ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநாட்டு முகப்பு கோட்டை மதில் சுவர் போல் வடிவமைக்கப்பட்டு. அதன் மீது தமிழ்நாடு சட்டமன்றம் வடிவில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைக்கப்படடு, காவல் துறையிடம் அனுமதி பெற்ற வகையில் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை 10 மணி முதல் கட்டணம் இன்றி வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. த.வெ.க. மாநாட்டிற்கு அதிக அளவில் வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் இல்லைசென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி செல்லலாம் என சுங்க சாவடி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளது.