For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீடு வாடகைக்கு விடுபவர்களின் கவனத்திற்கு! உரிமையாளர்களிடம் பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்!

05:50 AM Apr 24, 2024 IST | 1newsnationuser8
வீடு வாடகைக்கு விடுபவர்களின் கவனத்திற்கு  உரிமையாளர்களிடம் பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்
Advertisement

இந்திய விமானப்படையில் வேலைப் பார்ப்பதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மோசடி கும்பல் ஒன்று ஆட்டய போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் வீடு வாடகைக்கு என்றால் டூ லெட் போர்டு வைத்திருக்கும் வீடுகளை அலைந்து திரிந்து தேடி வீடு வாடகைக்கு செல்வார்கள். தற்போது, நவீன காலம் மாறியதில் இருந்தே எல்லாம் நவீனமாக மாறியுள்ளதால், இருந்த இடத்தில் இருந்தே OLX, No Broker உள்ளிட்ட இணையதள வாயிலாக வீடுகளை வாடகைக்கு தேடுகின்றனர். மேலும் வாடகைக்கு விடப்படுகிறது.

Advertisement

இதனை சிலர் சாதகமாக பயன்படுத்தி சிலரை குறிவைத்து பணம் பறித்து மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், சிவ சங்கர திவாரி என்ற பெயரில் சென்னை தாம்பரத்தில் உள்ள முதியவர் ஒருவரை இணையதள வாயிலாக தொடர்பு கொண்டார். மேலும், தான் இந்திய விமானப்படையில் வேலை பார்ப்பதாகவும், நேரில் பார்க்க இயலாது என்றும் கூறி புகைப்படங்கள் மூலம் வீடு பார்த்துள்ளார். மேலும், அட்வான்ஸ் தொகையை Gpay மூலம் செலுத்துவதாகவும் கூறி முதியவரின் Account number-ரை பெற்றுள்ளான்.

அதனை தொடர்ந்து, அக்கவுண்டை சரிப்பார்ப்பதாக கூறி முதியவரிடம் 100 ரூபாய் அனுப்ப மோசடி கும்பல் கேட்டுள்ளது. அதனை நம்பிய முதியவர் பணத்தை அனுப்பியதும் அந்த மோசடி கும்பல் முதியவரின் அக்கவுண்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல் ஆட்டய போட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த முதியவர் போலீசில் தகவல் தெரிவித்தார். எனவே, நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருவதால், வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ரொம்பவே அரிதான பாம்பே ரத்த வகை! அப்படி என்ன சிறப்பு?

Advertisement