For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை..!! திடீரென அவர் வெளியிட்ட வீடியோ..!! மதிமுகவில் பரபரப்பு..!!

Vigo will have surgery today. The party's general secretary Durai Vaiko has requested that the party executives may visit him after he returns home.
07:36 AM May 29, 2024 IST | Chella
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை     திடீரென அவர் வெளியிட்ட வீடியோ     மதிமுகவில் பரபரப்பு
Advertisement

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவர் வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வருகை தரலாம் என கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25ஆம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை வந்தடைந்தார். பின்னர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (மே 29) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், வைகோ தவறி விழுந்த தகவலறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். அறுவை சிகிச்சை முடிந்து 3 நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார். அரசியலில் வைகோ இழந்தது அதிகம். ஆனால் தனது நேர்மை, தியாகத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டனர். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அவருக்கு செய்யவிருப்பது சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை” என்றார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வைகோ வெளியிட்டுள்ளார். அதில், அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தனக்காக கவலை கொள்ளும் உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Read More : பள்ளிகள் திறந்ததும் இந்த தவறை செய்தால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை..!! மாணவர்கள் நிம்மதி..!!

Tags :
Advertisement