இனி ரேஷன் கடையில் இந்த பொருளும் கிடைக்கும்..!! வந்தது சூப்பர் அறிவிப்பு!!
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இலவமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தோடு சேர்த்து உத்தரகண்ட் அரசு உப்பு வழங்க முடிவு செய்து உள்ளது. ரூ. 8 க்கு குறைந்த விலைக்கு அயோடின் உப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் அயோடின் குறைப்பாட்டை போக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிம்புவாலாவில் உள்ள ஹிமாலயன் கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உப்பு வழங்கும் திட்டதை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் அதிகபட்ச வசதிகளை வழங்குவதே மத்திய மற்றும் மாநில அரசின் முதன்மையான முன்னுரிமை என்று அவர் கூறினார்.
மாநிலத்தின் 14 லட்சம் அந்தயோதயா குடும்பங்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்துடன் தொடர்புடைய குடும்பங்கள் அரசின் உப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கிலோ 8 ரூபாய்க்கு கிடைக்கும் உப்பின் சந்தை விலை கிலோ 30 ரூபாய் ஆகும். இந்த உப்பு ரேஷன் கார்டுதாரருக்கு வெறும் 8 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more | அச்சுறுத்தும் டெங்கு!. விரைவில் குணமாக இந்த மாதிரியான உணவை சாப்பிடுங்கள்!