கடை இட்லி மாதிரி, வீட்டிலேயே புசுபுசுன்னு இட்லி செய்யலாம்.. இந்த ரகசியத்தை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..
பொதுவாகவே, பெரும்பாலான வீடுகளில் எப்போதும் இட்லி அல்லது தோசை தான். இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களின் வீடுகளில் மாவு அரைப்பது இல்லை. மாறாக காசு கொடுத்து கடையில் வாங்கி விடுகின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் அரைக்க நேரம் இல்லை என்றாலும், மற்றொரு பக்கம் வீட்டில் அரைக்கும் மாவில் இட்லி தோசை செய்தால் நன்றாக இருக்காது என்பது தான். ஆனால் நீங்கள் இனி அதை பற்றி கவலை பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சின்ன டிப்ஸ் போதும் இனி குஷ்பு இட்லியை நீங்கள் வீட்டிலேயே செய்து விடலாம்.
இதற்க்கு முதலில், அரிசி அளக்கும் கப்பில் மூன்று கப் ரேஷன் புழுங்கல் அரிசி எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் உளுந்து அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 5 முறை நன்கு கழுவி எடுத்துவிடுங்கள். இப்போது நன்கு கொதிக்கும் சுடுதண்ணீரில் அரிசி மற்றும் உளுந்தை கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். சுடுதண்ணீரில் நாம் மாவை ஊற வைப்பதால் நாம் மாவை மிக்ஸியிலேயே அரைக்கலாம். ஊற வைத்த தண்ணீரின் சூடு ஆறிய பின், தண்ணீரை வடித்து விட்டு இப்போது மிக்ஸி ஜாரில் சேர்த்து விடுங்கள்.
இப்போது, அரிசி அளந்த கப்பில் மீண்டும் ஊற வைத்த அரிசியை அளந்து, நான்கு கப் அரிசியுடன் கால் கப் சாதம் அல்லது அவல் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரையுங்கள். நாம் மொத்தமாக முக்கால் கப் சோறு மற்றும் நான்கு கப் தண்ணீர் பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்போது அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து மூடி வைத்து விடுங்கள். இப்போது இந்த மாவு புளித்த உடன் இட்லி ஊற்றினால் கண்டிப்பாக அது புசுபுசுவென்று மிருதுவாக இருக்கும்.
Read more: உங்கள் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி கிடையாது!!!