முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'மின் சாதனங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய தகவல்..!!

04:52 PM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மின்சாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தலைமை பொறியாளர்களுடன் மின்விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் தளவாட பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழையால் சேதமடைந்த 169 மின் கம்பங்கள், 72 மின் மாற்றிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. மிக கனமழை காரணமாக ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் மின்விநியோக பாதிப்பு தொடர்பான புகார்களை 94987 94987 6760 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார். மழை காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின்கம்பங்களிடையே செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
அமைச்சர் தங்கம் தென்னரசுதமிழ்நாடுமின் சாதனங்கள்வடகிழக்கு பருவமழை
Advertisement
Next Article