For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை..!! என்ன குற்றத்திற்காக தெரியுமா..?

Joe Biden's son, Hunter Biden, has been found guilty of illegally buying a gun by a court in a sensational verdict.
07:33 AM Jun 12, 2024 IST | Chella
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை     என்ன குற்றத்திற்காக தெரியுமா
Advertisement

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக எழுந்த புகாரில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகளின் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகளும், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகளும் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விவரம் அறிவிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Read More : தூக்கத்தில் அழுகை வருகிறதா..? என்ன காரணம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement