For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சர்ச்சையை கிளப்பிய த்ரிஷா..!! முடிவுக்கு வரும் விஜயின் அரசியல் பயணம்..!! இப்படி சொல்லிட்டாரே..!!

A question has arisen whether Vijay's political career will end early. Many on social media are commenting that actress Trisha is the reason.
03:33 PM Jun 24, 2024 IST | Chella
சர்ச்சையை கிளப்பிய த்ரிஷா     முடிவுக்கு வரும் விஜயின் அரசியல் பயணம்     இப்படி சொல்லிட்டாரே
Advertisement

சமீபத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும் அதிரடியாக அறிவித்தார். மேலும், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தை தவிர, ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், தற்போது விஜய்யின் அரசியல் வாழ்க்கை ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நடிகை த்ரிஷா காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சரி, இப்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்ன தெரியுமா? விஜய் – த்ரிஷா காதல் விவகாரம் தான். இது ஒன்றும் புதிதல்ல. கில்லி, குருவி படத்தின் போது பரவிய கிசுகிசு தான். இப்போது இந்த கிசுகிசு பற்றி ஏன் பேசப்படுகிறது. அதற்கு த்ரிஷா சொன்ன பிறந்த நாள் வாழ்த்துகள் தான் காரணம்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு த்ரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் “நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” என்ற வார்த்தைகள் இடம்பெற்ற ஆங்கில பாடல் ஒன்றையும் பதிவிட்டார். இந்நிலையில், த்ரிஷா மற்றும் விஜய் இருக்கும் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்ட அதில் விஜய் தனியாக நடக்கும் போது ஒரு போட்டோவும், த்ரிஷா பக்கத்தில் ஒரு கால் இருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. விஜய் அணிந்திருந்த அதே ஷூ வை, த்ரிஷா அருகில் அமர்ந்திருக்கும் காலிலும் உள்ளது. இதனால் விஜய்யும் த்ரிஷாவும் அடிக்கடி வெளிநாடு சென்றுள்ளனர் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதே போல் த்ரிஷா பயணம் செய்யும் லோகேஷன்களில் விஜயும் இருந்தது சில போட்டோக்களில் தெரியவந்துள்ளது. இதனால் பலரும் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர். எனவே, இந்த விவகாரம் விஜய்யின் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் – த்ரிஷா விவகாரம் சம்மந்தப்பட்ட இருவரின் விஷயம் என்றாலும், அவர் பொது வாழ்க்கைக்கு வரும் இந்த விவகாரத்தை ஒரு கேள்வியாக எழுப்பலாம். எனவே, இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் தற்போது தான் அரசியல் பிரவேசத்தை தொடங்கி உள்ளார். எனவே, இது பெரிய விவகாரமாக மாறும் முன்பு இதற்கு விளக்கம் கொடுப்பது நல்லது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Read More : காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி..!! தேடிச் சென்ற சித்தப்பாவை வெட்டி சாய்த்த கொடூரம்..!! கோவையில் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement