For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

UPSC: இன்றே கடைசி நாள்!… 1206 காலி பணியிடங்கள்!… மிஸ் பண்ணிடாதீங்க!

05:45 AM Mar 05, 2024 IST | 1newsnationuser3
upsc  இன்றே கடைசி நாள் … 1206 காலி பணியிடங்கள் … மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Indian Forest Service Examination மற்றும் UPSC Civil Service Examination குரிய தேர்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1206 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC CSE தேர்வுக்கென 1056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வன சேவை தேர்வின் மூலம் மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.08.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

CSE தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். IFS பதவிக்கு இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டம் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ள பிற கல்வி நிறுவனங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது, மற்ற அனைவருக்கும் ரூ.100/- கட்டணம் வழங்கப்பட உள்ளது. UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 14.02.2024 அன்று முதல் 05.03.2024 அன்று வரை https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Readmore: இன்று எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி கெடு!… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்!

Advertisement