For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குரூப் 4 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயம்...! 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்...!

08:14 AM Feb 04, 2024 IST | 1newsnationuser2
குரூப் 4 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயம்     12 ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்
Advertisement

வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Advertisement

வனக் காவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2024 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement