தேர்வு கிடையாது.. பொதுப்பணித் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இம்மாதம் கடைசிக்குள்ளாக அதாவது டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கான விண்ணப்பங்கள் : சிவில் இன்ஜினீயரிங் - 460, எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் - 28, ஆர்க்கிடெக்சர் - 12 என மொத்தம் 500 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன் : சிவில் இன்ஜினீயரிங் - 150, எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் - 5, ஆர்க்கிடெக்சர் - 5 என மொத்தம் 160 பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்ளுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது என்பதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வு மூலம் மட்மே ஆள் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
Read more ; கார்த்திகை தீபம் 2024 : பழைய அகல் விளக்கில் தீபம் ஏற்றலாமா? ஆன்மீகம் சொல்வது என்ன?