அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? தவறுதலா கூட இத செய்யாதீங்க!! பணம் போயிடும்..
வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும். இதனால், ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது.
நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவார்கள். எனவே, ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் இந்த விஷயங்களை எல்லாம் மறந்து விட வேண்டாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இணையதளத்தில் விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். தேவையற்ற வெப்சைட்டுகளும் இடை இடையில் விளம்பரம் லிங்க் செய்யப்பட்டிருக்கும். இதில் தவறுதலாக எதையும் கிளிக் செய்தால் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்த பிறகு கடைசியாக QR code மூலம் பணம் செலுத்துவதற்கு பணம் அனுப்பும் முறை இருக்கும். இதில் கவனமுடன் இருக்க வேண்டும். சரியான ஐடியில் சென்று பணம் செலுத்த வேண்டும். ஏனெனில், இதிலும் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பிறகு அனைத்து பணத்தையும் ஒரே வங்கிக் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு அதில், நிறைய பணம் இருக்கும். ஷாப்பிங் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு பயன்படுத்தினால் அதிலுள்ள பணம் திருட வாய்ப்புள்ளது. எனவே, ஷாப்பிங் சமயத்தில் தனியாக ஒரு வங்கி கணக்கை பயன்படுத்தினால் நல்லது.
Read more ; கிரெடிட் கார்டில் இந்த விஷயத்தை செய்து சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! கண்டிப்பா இதை