முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இப்போது வரை நான் கண்ணகியாகதான் வாழ்ந்து வருகிறேன்”..!! ”அவரைப் பற்றிப் பேசவே எனக்கு விரும்பவில்லை”..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

From then until now, I have been living as a Kannagi. I will speak what is on my mind. I will do what is on my mind.
02:56 PM Jan 02, 2025 IST | Chella
Advertisement

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ”ரூ.25 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்தாகிவிட்டது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பின் தாக்கத்தை, அவர் இறக்கும் வரை மறக்க முடியுமா..? அந்தப் பெண் இருக்கும் வரை, அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் வருத்தம் இருக்கும்தானே.

Advertisement

ஏற்கனவே குற்றப்பின்னணி இருந்த ஒருவரை கைது செய்தப் பிறகும், எப்படி வெளியே விட்டீர்கள்? இனி இதுபோல நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதுபோன்ற பிரச்சனை வரும்போதெல்லாம் பணம் மட்டும்தான் கொடுக்கிறீர்கள். நாங்கள் பாஜக சார்பாக பேசவில்லை. பெண் என்பதால்தான் பேச வந்திருக்கிறோம். இதை அரசியலாக்காதீர்கள். பெண்கள் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் அரசியலாக்கிப் பேசுவதற்கு.

பாதிக்கப்பட்ட மாணவியைப் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே வந்து பேசியிருக்கிறார். அந்தப் மாணவியின் தகவலை வெளியே கசியவிட்டவர்களை தண்டிக்க வேண்டும். நான் தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்தபோது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இருந்துதான் பாலியல் புகார்கள் அதிகம் வரும். கண்ணகிக்கு உதாரணம் சொல்லும் நமது மாநிலத்தில், இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது.

இந்த விவகாரத்துக்கு நியாயம் கேட்டு பேரணி நடத்தவிருந்த பாமகவின் தலைவர் சௌமியா அன்புமணியை ஏன் கைது செய்திருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் கனிமொழி எங்கே சென்றார்? திமுக-வின் மகளிர் அணி எங்கே? ஏன் இந்த மௌனம்? 'மத்திய அரசுதான் எஃப்.ஐ.ஆர் கசியவிட்டது. கேட்டால் டெக்னிக்கல் பிரச்சனை என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் நடக்காத டெக்னிக்கல் எரர் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி நடக்கிறது' என சீமான் விமர்சனம் வைத்திருக்கிறார்.

அவரைப் பற்றிப் பேசவே எனக்கு விரும்பவில்லை. அவர் இந்தக் கேள்விகளை முதல்வரைப் பார்த்துக் கேட்டால் சரியாக இருக்கும். மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் அமைதியாகதான் இருக்கிறது. இந்த நாட்டைத் தாண்டினால் எச்சில் துப்பக்கூட பயப்படுபவர்கள். ஆனால், நாம் நாட்டில் மட்டும்தான் குற்றங்களை சாதாரணமாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சென்னைக்கு வந்து 38 வருடங்களாகிறது. அப்போது முதல் இப்போது வரை கண்ணகியாகதான் வாழ்ந்து வருகிறேன். மனதில் பட்டதைப் பேசுவேன். செய்வேன். குஷ்பு எப்படி இருப்பாரோ எப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்” என்றார்.

Read More : காதலனை அடித்து துரத்திவிட்டு காதலியை காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

Tags :
கண்ணகிதமிழ்நாடுநடிகை குஷ்புபாலியல் குற்றங்கள்மாணவி
Advertisement
Next Article