For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும்...! அமித் ஷா உறுதி...

06:10 AM Nov 26, 2023 IST | 1newsnationuser2
முஸ்லிம்களுக்கான 4  இட ஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும்     அமித் ஷா உறுதி
Advertisement

தெலங்கானா மாநிலத்தில் அமலில் உள்ள முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில் தான், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, முறைகேடுகளிலும் ஊழல் செய்வதிலும் முன்னணியில் உள்ளது என்றும், மக்களுக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். சந்திரசேகர ராவ் அரசு மீது இளைஞர்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாடுவதற்கு அஞ்சுகிறார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி மீதான அச்சமே இதற்குக் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்தால், ரசாக்கர்ஸ் இடமிருந்து ஹைதராபாத் விடுவிக்கப்பட்ட தினத்தை தெலங்கானா தினமாக கொண்டாடப்படும்.

Tags :
Advertisement