For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெறும் ரூ.1000... மத்திய நிதி அமைச்சர் மாணவர்களுக்கு இன்று தொடங்கி வைக்க போகும் அசத்தல் திட்டம்...!

Union Finance Minister is going to launch a crazy scheme for students today
07:47 AM Sep 17, 2024 IST | Vignesh
வெறும் ரூ 1000    மத்திய நிதி அமைச்சர் மாணவர்களுக்கு இன்று தொடங்கி வைக்க போகும் அசத்தல் திட்டம்
Advertisement

மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று டெல்லியில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கஎன்பிஎஸ் வாத்சல்யாவுக்கு சந்தா செலுத்துதல், திட்ட சிற்றேட்டை வெளியிடுதல் மற்றும் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஆன்லைன் தளத்தையும் மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைப்பார்.

Advertisement

டெல்லியில் இத்திட்டம் தொடங்குவதன் ஒரு பகுதியாக, என்.பி.எஸ் வாத்சல்யா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும். மற்ற இடங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடக்க நிகழ்ச்சியில் இணையும். மேலும், அந்த இடத்தில் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உறுப்பினர் அட்டை விநியோகிக்கப்படும். என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க முடியும். குழந்தையின் பெயரில் பெற்றோர்கள் ஆண்டுதோறும் ரூ.1,000 முதலீடு செய்ய அனுமதிக்கிறது, இது அனைத்து பொருளாதார பின்னணியிலிருக்கும் குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இந்த புதிய முயற்சி குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் விரைவில் தொடங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நடத்தப்படும். என்பிஎஸ் வாத்சல்யாவின் தொடக்கம், அனைவருக்கும் நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை நிதி ரீதியாக பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

Advertisement