Delhi elections : ஆபரேஷன் தாமரையை அமல்படுத்தி 5000 வாக்குகளை சிதைக்க பாஜக திட்டம்..!! - கெஜ்ரிவால் குற்றசாட்டு
ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் முறைக்கேடு செய்வதாக பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் வாக்காளர் பட்டியலைக் கையாள பாஜக டிசம்பர் 15 முதல் 'பரேஷன் தாமரை' இயக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், எனது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜக 'ஆபரேஷன் தாமரை' என்ற ப்ளானை டிசம்பர் 15 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த 15 நாட்களில், அவர்கள் 5,000 வாக்குகளை நீக்கவும், 7,500 வாக்குகளைச் சேர்க்கவும் விண்ணப்பித்துள்ளனர். சட்டசபையில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 12 சதவீத வாக்காளர்களைக் கையாளும் நீங்கள் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏன்?, தேர்தல் என்ற பெயரில் ஒரு வகையான விளையாட்டு நடக்கிறது என அவர் கூறினார்.
மேலும், நேர்மையின்றி எப்படியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஆனால், டெல்லி மக்கள் இதை நடக்க விடமாட்டார்கள். ஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்களில் அவர்கள் கையாண்ட தந்திரங்களை - இங்கு பயன்படுத்தி வெற்றி பெற விட மாட்டோம் என தெரிவித்தார்.
Read more ; தென்கொரியாவை உலுக்கிய விமான விபத்து.. சிதறி கிடக்கும் சடலங்கள்.. பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு..!!