இன்றுடன் முடிவடையும் உக்ரைன் அதிபரின் பதவிக்காலம்!… அடுத்து என்ன நடக்கும்?
உக்ரைன் அதிபரான Volodymyr Zelenskyy-இன் பதவிக்காலம் இன்றுடன் (மே 20) முடிவடைகிறது, ஆனால் தற்போது நடந்து வரும் போர் பதற்றதால் நாட்டில் தேர்தல்களை தாமதப்படுத்தும் நிலை ஏற்பட்டால் அவர் பதவியில் நீடிப்பார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா 'நேட்டோ' அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.
இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போரில் தற்போது வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
15,000 க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 2023 ஜூன் மாதம் வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது.
இந்நிலையில், இன்றுடன் (மே 20) உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் நடந்துக்கொண்டிருப்பதால் இதற்கான தேர்தல் நடப்பது தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, அந்நாட்டில் ராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் வரை அதிபர் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது.
தேர்தல்கள் நடைபெறும் வரை Zelenskyy அதிபராகத் தொடர அனுமதிக்கப்படும் அதே வேளையில், இராணுவச் சட்டத்தின் கீழ் அவரது அதிகாரங்களின் சட்டப்பூர்வமான தன்மை மற்றும் பொதுமக்களின் பார்வையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், உக்ரைன் அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதை ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பயன்படுத்தி நாட்டின் அரசாங்கத்தையும், ஜெலென்ஸ்கியின் ஆட்சியின் சட்டபூர்வமான தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பதவிக்காலம் முடிந்த பிறகு Zelenskyy எப்படித் தொடர்வார்? இது குறித்து விளக்கமளித்துள்ள உக்ரைனின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ஸ்டானிஸ்லாவ் ஷெவ்சுக், ஜெலென்ஸ்கியின் ஆட்சிக்கு சட்டப்பூர்வமாக எந்த சவாலும் இல்லை என்று கூறினார். அடுத்தவர் பதவியேற்கும் வரை அதிபர் பதவியில் இருப்பார் என்று அரசியலமைப்பின் 108வது பிரிவு கூறுகிறது என்று ஷெவ்சுக் கூறினார்.
"இராணுவச் சட்டத்தின் போது எந்தவொரு தேர்தலையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது என்பதால், இந்த அணுகுமுறை அதிபர் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தேர்தல்கள் ஒரு ஜனநாயக மாநிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த செயல்முறையாகும். மேலும் அரசாங்கத்தின் தொடர்ச்சி" என்ற கொள்கையின்படி அவர்களின் வாரிசு வரும் வரை அதிபர் அவர்களின் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று ஷெவ்சுக் கூறினார். "அமைதிக் காலத்திலோ அல்லது போர்க்காலத்திலோ அதிகார வெற்றிடம் இருக்க முடியாது. இதற்கு உக்ரைன் அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது" என்று ஷெவ்சுக் கூறினார்.
Readmore: ‘வானில் திடீரென நடந்த அதிசயம்’ அடேங்கப்பா.. இவ்வளவு வெளிச்சமா?