உஜ்வாலா யோஜனா திட்டம்!. அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறதா?. புகார் எண்கள் அறிவிப்பு!
Ujjwala Yojana: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதில் அவர்களுக்கு சிலிண்டர் நிரப்ப மானியமும் வழங்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பதவி ஏற்றத்தை அடுத்து, உஜ்வாலா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு கேஸ் அடுப்பு மற்றும் ஒரு எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. மேலும் அடுத்தடுத்த கேஸ் சிலிண்டர் வாங்கும் பொழுது அதற்கு மானியமும் வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலமாக கிட்டத்தட்ட 10 கோடி குடும்பங்கள் பலனடைவார்கள். மத்திய அரசு இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தற்போது துவங்கி உள்ளது. அதாவது இந்த திட்டம் மூலமாக பலன் பெற நினைக்கும் நபர்கள் தாராளமாக அதற்கு விண்ணப்பிக்க துவங்கலாம். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் யாராவது உங்களுக்கு விலையுயர்ந்த சிலிண்டரைக் கொடுத்தால், அதைப் பற்றியும் புகார் செய்யலாம். எனவே நீங்கள் எப்படி புகார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
சிலிண்டர் விலை உயர்ந்ததாக இருந்தால், 1800-266-6696 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், நீங்கள் எல்பிஜி அவசர உதவி எண் 1906 இல் புகார் செய்யலாம். இதனுடன், வெவ்வேறு நிறுவனங்களின் வெவ்வேறு எண்களைப் பெறுவீர்கள், எனவே நீங்கள் அங்கு புகார் செய்யலாம்.
Readmore: வங்கதேச உச்சநீதிமன்ற நீதிபதி கைது!. நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக எல்லையில் நிறுத்திவைப்பு!