மாணவர்களே உஷார்...! இனி பட்ட படிப்பு எல்லாம் செல்லாது...! UGC அதிரடி அறிவிப்பு...!
யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளில் இந்திய மாணவர்கள் பட்டம் பெற்றால் அது செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் வெளிநாட்டு அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள் அல்லது கமிஷனால் அங்கீகரிக்கப்படாத வழங்குநர்களுடன் கூட்டு ஒப்பந்தங்களை செய்து மாணவர்களுக்கு வெளிநாட்டு பட்டங்களை வழங்கி வருகிறது என்று யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி கூறினார். யுஜிசியால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளில் இந்திய மாணவர்கள் பட்டம் பெற்றால் அது செல்லாது என்றார்.
அதே போல , கல்விசாா் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை இணைய வழியில் வழங்கி வருவதாக நாளிதழ்கள், சமூகஊடகங்களில் விளம்பரங்கள் வெளியாகின்றன. இத்தகைய படிப்புகளுக்கு எவ்வித அனுமதியும் யுஜிசி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து தங்களது பட்ட படிப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கூறினார்.