வானில் 6 முறை வட்டமடித்த துணை முதல்வர் உதயநிதி சென்ற விமானம்..!! சேலத்தில் பரபரப்பு..!!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற விமானம், வானில் வட்டமடித்த பின் சேலத்தில் தரையிறக்கப்பட்டது. சேலத்திற்கு அவர் விமானத்தில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக வானில் 6 முறை வட்டமடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் பிற்பகல் 3.25 மணிக்கு தரையிறங்க வேண்டிய நிலையில், வானிலை மாற்றத்தால் மாலை 4.05 மணிக்கு தரையிறங்கியது.
உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
முன்னதாக சென்னையில் இருந்து விழுப்புரம் விரைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் நகரம், மரக்காணம், திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன், வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிது, நிவாரண முகாமில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்க்ட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
Read More : ”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எப்போது”..? முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!