முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'முதல்வராகிறார்' உதயநிதி.? ஜனவரி 27 வெளியாகும் அவசர அறிவிப்பு.!

05:12 PM Jan 24, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைக்கும் பொருட்டு அரசு முறை பயணமாக வருகின்ற 27ஆம் தேதி அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் .

Advertisement

10 நாட்கள் நீடிக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் அவருடன் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் திரும்பி வரும் வரை பொறுப்பு முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணங்கள் செல்லும் போது பொறுப்பு முதலமைச்சர் நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது .

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றங்களால் அதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கட்சியின் தலைமையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு இந்தப் பொறுப்பு முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் திரும்பி வரும் வரை தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
announcementmk stalinpoliticsUdhayaniidhi Stalin
Advertisement
Next Article