For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"காலம் மாறிப்போச்சு.. அவரோட நான் போட்டி போட முடியுமா.?.." வைரலான உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.!

05:00 PM Feb 06, 2024 IST | 1newsnationuser7
 காலம் மாறிப்போச்சு   அவரோட நான் போட்டி போட முடியுமா      வைரலான உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் சமூக வலைதளப் பதிவு ஒன்று வைரலாகி இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த பதிவை தற்போது விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

2011 ஆம் வருடம் உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தளபதி விஜய்யின் நண்பன் திரைப்படத்துடன் போட்டி போடுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்திருந்த உதயநிதி "போங்க பாஸ் நான் என்ன லூசா? விஜய் அண்ணா கூட போட்டி போட.! என்று அந்த ரசிகருக்கு பதில் அளித்து இருந்தார்.

தற்போது தளபதி விஜய் அரசியலில் களம் இறங்கி இருக்கும் சூழலில் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவருடன் போட்டி போடக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 13 வருடங்களுக்கு முன் சினிமா குறித்த உதயநிதியின் பதிவை தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் இணைத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
Advertisement