329 நிவாரண மையங்கள்.. தயார் நிலையில் படகுகள்.. கனமழையை எதிர்கொள்ள தயார்..!! - உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையை எதிர்க் கொள்ள தயார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழ்நாடு துணை முதலமைச்ச உதயநிதி ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சரின் கட்டளையின்படி இன்று GCC-இல் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ICCC) நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம்.
1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் இயந்திரங்களும் தயாராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல, Previous October மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை mobilise செய்துள்ளோம்.
GCC சார்பில், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தியிருக்கின்றோம். அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள். மேயர், துணை மேயர் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்துவிடுவோம்" என்ரார்.
Read more ; கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஊர் மக்கள்..!! கடைசியில் நடந்த விபரீதம்..