15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவுக்கார சிறுவன்..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் தாயார், அவரை அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்குச் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்த விஷயத்தை மருத்துவர்கள் சிறுமியின் தாயாரிடம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பின்னர், நடந்த சம்பவத்தை மகளிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி, உறவுக்காரரின் மகனான 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமானதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து கோபிச்செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.