For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரட்டை இலை சின்னம்..!! எடப்பாடி பழனிசாமி வந்த புது சிக்கல்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

'The petitions related to the two-leaves symbol should be investigated and a solution should be found quickly,' he ordered.
01:55 PM Dec 17, 2024 IST | Chella
இரட்டை இலை சின்னம்     எடப்பாடி பழனிசாமி வந்த புது சிக்கல்     தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு
Advertisement

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

இரட்டை இலை சின்னம், கட்சி கொடியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் உரிமைக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதில் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்றும், தான் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக கூறி புகழேந்தி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவிற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி அவரை டிசம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளோம் என்றும் அவரது கோரிக்கை மனுவும் அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதே சமயம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பிறகே தேர்தல் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புகழேந்தி தரப்பு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ”இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுக்களை விசாரித்து விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று உத்தரவிட்டார். அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Read More : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு..!! ஆதரவு, எதிர்ப்பு எத்தனை பேர் தெரியுமா..?

Tags :
Advertisement