ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா..!! கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வாக்கெடுப்பு..!! ஆதரவு, எதிர்ப்பு எத்தனை பேர் தெரியுமா..?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இதுதொடர்பான மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
வருகிற 20ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129-வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று அறிமுகம் செய்தார். இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 பேர் ஆதரவும், 149 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Read More : சபரிமலையில் அதிர்ச்சி..!! மாலை அணிவித்து கோயிலுக்கு வந்த தமிழக பக்தர் தற்கொலை..!! வைரலாகும் வீடியோ..!!