கோயில்கள் மற்றும் மசூதிகள் இல்லாத இரண்டு நாடுகள்..! எந்தெந்த நாடுகள் தெரியுமா..!
உலகெங்கிலும், இந்து மற்றும் இஸ்லாம் மதம் இரண்டையும் பின்பற்றுபவர்கள் மில்லியன் கணக்கானவர்கள் உள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளனர், அங்கு கோயில்களும் மசூதிகளும் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், கோயில்கள் மற்றும் மசூதிகள் இல்லாத இரண்டு நாடுகள் உள்ளது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவை வடகொரியா மற்றும் வாடிகன் ஆகிய இரண்டு நாடுகள் ஆகும். இங்கு தான் கோயில்கள் மற்றும் மசூதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா: வடகொரியாவில், 52% க்கும் அதிகமான மக்கள் எந்த மதத்தையும் கடைபிடிக்கவில்லை. சுமார் 32% கிறிஸ்தவர்கள், 14% பௌத்தம் மதத்தை சேர்ந்தவர்கள், 1% பிற மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.
வத்திக்கான் நகரம்: வத்திக்கான் நகர் இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இந்த நகரத்தில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே வீடு. இது கிறிஸ்தவத்தின் புனிதமான தளமாகக் கருதப்படுகிறது, மேலும் இது உலகின் மிகச்சிறிய நாடாகும். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மத நடவடிக்கைகளுக்காக இங்கு வருகிறார்கள். இந்த நாட்டில் கோயில்கள் மற்றும் மசூதிகள் இல்லை.
Read More: டெங்கு பாதிப்பை எந்த டெஸ்ட் எடுத்தால் உறுதி செய்ய முடியும்..? எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?