'சமரசமின்றி பணி தொடரட்டும்..' சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று, புதிய மாநில குழு தேர்வு, மாநில கட்டுப்பாட்டு குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு ஆகியவை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 80 நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பெ.சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் திரு. பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்.
Read more ; 2025-ம் ஆண்டில் TNPSC & TRB மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்…?