BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி, டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவு பெறும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஜனவரி 10 - வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஜனவரி 17 - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
ஜனவரி 18 - வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை
ஜனவரி 20 - வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
பிப்ரவரி 5 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு
பிப்ரவரி 8 - வாக்கு எண்ணிக்கை