For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது..!! என்ன விவகாரம்..?

TVK general secretary Bussy Anand arrested
04:37 PM Dec 30, 2024 IST | Mari Thangam
பரபரப்பு   தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது     என்ன விவகாரம்
Advertisement

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள்  வெளியே இருந்து வந்த நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது மாணவர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. எனவே கல்லூரிகளிலும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாக அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

Advertisement

இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும். நடிகருமான விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கெண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்தும் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக  அவலகங்கள்,  சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று. பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக  மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்டைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்க எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை.  என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும், எனவே எதைப்பற்றியும் கவலை  கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான  தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என விஜய் அந்த கடித்தத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களா பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி இன்றி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதால தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தொண்டர்களுடன் வைக்கப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை.. வயதிற்கு ஏற்ப எத்தனை மணி நேரம் தூக்கம் தேவை..?

Tags :
Advertisement