டியூசனுக்கு படிக்க வந்த சிறுவன்... டீச்சரின் தங்கையால் ஏற்பட்ட விபரீதம்..
சென்னை, அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் சென்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் பேசி வந்த நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், சிறுவன் பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் உடனடியாக பாண்டிச்சேரிக்கு சென்று சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுடன் 22 வயது இளம்பெண்ணும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிறுவனின் காதலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில், இளம்பெண் தனது அக்காவின் டியூஷனில் படிக்க வந்த 15 வயது சிறுவனை காதலித்து, பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
Read more: பெண்களே கவனம்!! இயற்க்கை உபாதை கழிக்க சென்ற 40 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…