மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!! வெளியான குட் நியூஸ்..!!
கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு விதித்த நிபந்தனைகளின்படி, தேர்வு செய்யப்பட்ட 1.15 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 15ஆம் தேதி உரிமைத்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
இந்த சூழலில் அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்காவிட்டால் அது தேர்தலில் எதிரொலித்துவிடும் என திமுக கருதுவதாக தெரிகிறது. இதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி முதல் ரூ.1,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தற்போதைய சூழலில் வருமான வரி செலுத்தும் பெண்கள், சொந்த வீடு, நிலம், கார், இருசக்கர வாகனங்கள், ஆண்டுக்கு 2,400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால், மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.