பெண்களே உஷார்.! டெலிகிராம் மூலம் நூதன விபச்சாரம்.! துருக்கி பெண் உட்பட 8 பேர் கைது.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இந்த கும்பலின் தலைவி உட்பட 8 பேரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
பெங்களூர் நகரில் ஹைடெக் விபச்சாரம் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியது பெங்களூர் காவல்துறை. இந்நிலையில் அங்குள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கஷ்டமர் போல விடுதிக்கு சென்ற காவல்துறையினர் விபச்சாரக் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த கும்பல் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பெங்களூர் டேட்டிங் கிளப் என்று குழுவை உருவாக்கி அதன் மூலம் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பலின் தலைவி பியோனிஸ் சுவாமி கௌடா(40) மற்றும் அவருக்கு உதவி புரிந்த புரோக்கர்கள் அக்ஷய் கோவிந்தராஜ் வைகாஸ் பிரகாஷ் மனோஜ் தாஸ் பிரமோத் குமார் மற்றும் ஜிதேந்திர சாகு உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு தலைவியாக செயல்பட்ட பியோனிஸ் துருக்கி நாட்டை பூர்விகமாக கொண்டவர் என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்த பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.