துருக்கி துயரம்!. தீவிபத்தில் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!. 'இதயம் உடைந்துவிட்டது'!. அமைச்சர் கூறிய அதிர்ச்சி தகவல்!.
Turkey fire: வடமேற்கு துருக்கியில் உள்ள பிரபல ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 12 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது, உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அதிகாரப்பூர்வ தகவல் அளித்துள்ளார்.
வட மேற்கு துருக்கியில் இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியில் உள்ள கர்தல்காயாவில் உள்ள கிராண்ட் கார்டால் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. தற்போது துருக்கியில் இரண்டு வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் ஹோட்டலில் நேற்று திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து விடுதியில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும் அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, “எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். தீவிபத்துக்கு காரணமானவர்கள் நீதியிலிருந்து தப்ப முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலியான 76 பேரில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்வதாகவும் யெர்லிகாயா கூறினார். காயமடைந்தவர்களில் குறைந்தது ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் கெமல் மெமிசோக்லு தெரிவித்தார்.
Readmore: தினமும் இந்த மஞ்சள் நீர் குடிங்க, கொரோனாவே திரும்ப வந்தாலும் உங்களுக்கு ஒன்னும் ஆகாது!!