அமெரிக்கர்களின் குழந்தைகளுக்கு கூட இனி அமெரிக்க குடியுரிமை கிடைக்காது!. 150 ஆண்டுகள் பழமையான சட்டத்தை மாற்றிய அதிபர் டிரம்ப்!.
US citizenship: அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்றார். இதன்மூலம், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே, அதிபர் டொனால்ட் டிரம்ப் பல அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைக்கும் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.
அதாவது இப்போது அமெரிக்க குடியுரிமைக்கான சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் குழந்தை பெற்றால், அந்த குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இந்த சட்டம் தவறானது என்றும், இதனால் அமெரிக்காவின் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களின் குழந்தைகளும் அமெரிக்கக் குடிமக்களாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைகளுக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த உத்தரவின்படி, எதிர்காலத்தில் குழந்தைகள் தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், டொனால்ட் டிரம்பின் இந்த நிர்வாக உத்தரவின் குடியுரிமை தொடர்பான முடிவு என்ஆர்ஐகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பியூ ஆராய்ச்சி அறிக்கையின்படி, 48 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர், அவர்களில் 16 லட்சம் பேர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பரபரப்பு…! பாலியல் குற்றவாளி ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி…!