முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?

Actor Siddharth and actress Aditi Rao Hydari have officially announced their marriage.
01:53 PM Sep 16, 2024 IST | Chella
Advertisement

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 'பாய்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்தாண்டு வெளியான 'சித்தா' திரைப்படம் சித்தார்த்துக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில், சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கினர். இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28ஆம் தேதி இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் தான், இன்று நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தெலங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். சித்தார்த் - அதிதி தம்பதிக்கு ரசிகர்களும் திரைத்துரையினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More : நாளை பொது விடுமுறை..!! இதெல்லாம் இயங்காது..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tags :
அதிதி ராவ் ஹைதரிதிருமணம்நடிகர் சித்தார்த்
Advertisement
Next Article