மீண்டும் கடல் பகுதிகளை சுனாமி தாக்கும் அபாயம்.! ஆய்வாளர்கள் வெளியிட்ட எச்சரிக்கை தகவல்.!
கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பிழைக்கோடு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கனடா மற்றும் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் மிகப்பெரிய சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
மேலும் புவியியல் ஆய்வாளர்கள் சானிச் தீபகற்பம் பகுதியில் 2300 ஆண்டுகள் முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கனடா மற்றும் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கின்றனர்.
வட அமெரிக்கா கடற்கரை பகுதிகளில் நடத்தப்பட்ட ஜியாலஜிக்கல் மேப்பிங் மற்றும் டோபோகிராபி ஆய்வுகளின் மூலம் பூமிக்கு அடியில் 45 மைல் தூரத்திற்கு பிழை கோடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இவை 14,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தப் பாறைகளில் நிலநடுக்கம் ஏற்படுமானால் அது மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள் இந்த சுனாமியால் கனடா மற்றும் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் வாழும் நாலு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.