நின்றபடி தண்ணீர் குடித்தால் ஆபத்தா? நிபுணர் கூறும் அறிவுரை...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அவசரமான கால சுழலில், சாப்பிட, தண்ணீர் குடிக்க, தூங்க என எதுக்குமே சரியான நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவசர அவசரமாக அனைத்தையும் செய்ய வேண்டி உள்ளது. இந்த பிரச்சனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது. இதனால், ஸ்கூல் வேன் வருவதற்கு முன்னும், வேலைக்கு செல்லும் அவசரத்திலும் நின்று கொண்டே சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது என்று அனைத்தையும் செய்கிறோம். இதனால் உடலில் பிரச்சனை தான் ஏற்படும். ஆம், தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் தவறான முறையில் தண்ணீர் குடித்தால் முழங்கால் வலி ஏற்படும் அபாயம் உள்ளது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
சிலருக்கு நேரம் இல்லாமல் நின்று கொண்டே தண்ணீர் குடிக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது வழக்கம் ஆகி விட்டது. உட்கார்ந்து சாப்பிட்டாலும், கையை கழுவி விட்டு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது உண்டு. ஆனால், இப்படி நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் முழங்கால் வலி ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அது உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு மூட்டுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் இப்படி நின்று கொண்டே தண்ணீர் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும், நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, அந்த நீர் வயிற்றின் கீழ் பகுதிக்கு சென்று சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதனால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, ஒரு போதும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், எப்போது தண்ணீர் குடித்தாலும் வசதியாக உட்கார்ந்தபடி தான் குடிக்க வேண்டும் எனவும், அவசர அவசரமாக குடிக்காமல் நிதானமாக குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன் மற்றும் உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..