அதிமுக எம்எல்ஏ - திரிஷா விவகாரம்.! திடீர் மன்னிப்பு கேட்ட 'EX' நிர்வாகி ஏ.வி ராஜு.!
அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜு கூவத்தூர் ரிசார்ட் குறித்து பேசிய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக அதிமுக கட்சியில் பதவி வகித்தவர் ஏ.வி ராஜு. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் நடிகைகளுடன் கூவத்தூர் விசார்ட்டில் உல்லாசமாக இருந்ததாக பகிரங்கமாக பேட்டி அளித்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை தான் தனக்கு வேண்டும் என அடம் பிடித்து வாங்கியதாக தெரிவித்தார். இந்த நடிகைக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்து அழைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கான அனைத்து செலவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி செலவு செய்ததாக கூறினார். மேலும் நடிகர் கருணாஸ் நடிகைகளை ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு நடிகை திரிஷா அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறிய சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர் கவனம் ஈர்ப்பதற்காக சிலர் மிகவும் அருவருப்பான செயல்களை செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சினிமா நடிகைகள் பற்றி தான் கூறிய கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஏ.வி ராஜு. இது தொடர்பாக அறிக்கையை விட்டிருக்கும் அவர் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனக் கூறி திரைத்துறையினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளார் . இவரது மன்னிப்பு கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
English Summary: Admk ex secretary A.V.Raju Apologizes unconditionally for the way he linked actress trisha and other celebrities in kuvathur resort issue.He Claimed that his speech was competely misunderstood